செங்கலடி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும்
செங்கலடி மத்திய கல்லூரியின் 2025 ஆம் ஆண்டிற்கான பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் எதிர்வரும் 06-07-2025 அன்று காலை 10 மணிக்கு சப்தம் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வானது சங்கத்தின் தலைவரும் பாடசாலை அதிபருமாகிய திரு.க.சுவர்ணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் நிகழ்ச்சிகளாக மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தலைமையுரை, ஆண்டறிக்கையும் கூட்டறிக்கையும் சமர்ப்பித்தல், நிதி அறிக்கை சமர்ப்பித்தல், புதிய நிருவாகத் தெரிவு என்பன இடம்பெற உள்ளன. இந்நிகழ்விற்கு சங்கத்தின் அங்கத்தவர்களான பழைய மாணவர்களைக் கலந்துகொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம் அழைக்கின்றது.
மேலும் 05-07-2025 அன்று மாலை 5 மணியளவில் ‘சுடரிகளின் இரவு’ என்னும் தொனிப்பொருளில் செங்கலடி மத்திய கல்லூரியில் கற்பித்த முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்களை பழை மாணவர் சங்கம் அழைக்கின்றது.
முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் பலரது தொடர்புகளைப் பெற்றுக் கொள்வது கடினமாக உள்ளமையால் இச்செய்தியினை கனிவான அழைப்பாக ஏற்குமாறு சங்கம் வேண்டிக் கொள்கிறது. கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்துவதற்கு பழைய மாணவர் சங்கச் செயலாளர் திரு மோகன் டிலான் அவர்களை 0776077417 மற்றும் செ.தஸ்கரன் 778984736 என்னும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் சங்கம் கேட்டுக்கொள்கிறது