கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டை நிறைவை சிறப்பிக்கும் நடைபவனி



நேற்று (17/08/2025) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான நடைபவனி பாடசாலையின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழும் 125th Jubilee குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புடனும் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக எமது பாடசாலையின் பழைய மாணவரும் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான திரு Y. Jeyachandran Sir அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலையினால் 125ஆண்டுகளில் கல்வி மற்றும் கல்வி சாரா வெற்றிகளை வெளிப்படுத்தும் வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிக்கிண்ணங்களும் காட்சிப்படுத்தப்பட்டது.

மேலும் தரை, வான், கடல் மூலம் பாடசாலைக் கொடி பறக்கவிடப்பட்டது விசேட அம்சமாவதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் குறித்த நடைபவனி வெகு சிறப்பாக இடம்பெற்றது.