ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வீட்டில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த இடத்துக்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.