மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்


மியன்மாரின் சைபர் கிரைம் மோசடி முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மியன்மாரில் மியாவாடி பகுதியில் உள்ள இந்த சைபர் கிரைம் மோசடி முகாம்கள் தீவிரவாதிகளால் இயங்கி வருகின்றன.

சுற்றுலா விசாவில் மியன்மாருக்க சென்ற இலங்கையர்களே இவ்வாறு சைபர் கிரைம் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சைபர் கிரைம் மோசடி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல இலங்கையர்கள் மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கை தூதரகங்களின் ஒத்துழைப்பு மற்றும் மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் உதவியுடன் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 13 இலங்கையர்களும் இலங்கைக்கு மீண்டும் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.