2015 முதல் முன்னாள் ஜனாதிபதிகள், விதவைகள் ஆகியோருக்காக செலவிடப்பட்ட நிதியை வெளியிட்டது அரசாங்கம் !
2015 முதல் 2025 வரை ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவியர் சார்பாக செய்யப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற செலவுகள் குறித்த விவரத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 01, 2015 முதல் ஜூன் 30, 2025 வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தால் மொத்தம் ரூ. 33,003,454 செலவுகள் செய்யப்பட்டுள்ளன.
ஹேமா பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கான செலவு பதிவு செய்யப்பட்டுள்ளது.