நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE) பிரதிநிதிகளுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்தத் துறையின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்பட்டுள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததுடன், அதற்கான முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தனர்.
நாட்டை நவீனமயப்படுத்த இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன்போது அரச சேவைக்குத் தேவையான நவீன தொழிநுட்பம் மற்றும் வசதிகளை வழங்குவதுடன் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2026 வரவுசெலவுத் திட்டத்திற்கான தமது ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைக்க வாய்ப்பளித்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தத பிரதிநிதிகள் குழு, ஊழல் மற்றும் மோசடி அற்ற, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் ஒரு நாட்டை உருவாக்குவதற்கான ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் பாராட்டியது.
மேலும், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினர்.
நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரசல் அபோன்சு, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.