மொரட்டுவை, ராவதாவத்தை பகுதியில் சனிக்கிழமை (13) காலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸானது மரமொன்றின் மீது மோதி பின்னர் வீதியின் இடது பக்கமாக திரும்பி க் ஒன்றுக்கு முன்னால் இருந்த இரும்பு கம்பியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸின் முன்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.