ஆசிரியர் சேவை குறித்து கல்வியமைச்சின் அறிவிப்பு



2023 மார்ச் மாதம் 25ம் திகதி வரை பாடசாலைகளில் சேவையாற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரச சேவையிலுள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் இடம்பெறவிருந்த போட்டிப் பரிட்சை தொடர்பிலான உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் பின்னர் குறித்த பரிட்சை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.