முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவெல்லவின் மகன் ரமித் ரம்புக்கவெல்லவுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நேற்று வெள்ளிக்கிழமை (12) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
270 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக சம்பாதித்த குற்றச்சாட்டின் பேரில் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ரமித் ரம்புக்கவெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.