10 ஆயிரம் போதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது !



மொரட்டுவையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், போதைமாத்திரைகள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, மொரட்டுவை - லக்ஷபதிய பகுதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கிகள், 10 ஆயிரம் போதைமாத்திரைகள், 86 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 04 கையடக்க தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 14ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மொரட்டுவை பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், மொரட்டுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.