பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி !


பாதுக்கை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் திடீரென சுகயீனமுற்று 60 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்ட 60 மாணவர்கள் திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.

இதனையடுத்து சுகயீனமுற்ற மாணவர்கள் அனைவரும் பாதுக்கை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் 40 பேர் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ள நிலையில் ஏனையவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், மூவர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் இவ்வாறு சுகயீனமுற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பாதுக்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.