தம்பிலுவில் கனகர் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த பரிசளிப்பு விழா




(சித்தா)
கமு/திகோ/தம்பிலுவில் கனகர் வித்தியாலயத்தின் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த பரிசளிப்பு விழா வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் பாடசாலை அதிபர் சபாரெத்தினம் ஸ்ரீகாந்தன் தலைமையில் மிக விமரிசையாக 2028.10.17 ஆம் திகதி நடைபெற்றது.
 
வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற நான்கு மாணவர்களும் சித்தி அடைந்த 20 மாணவர்களும் இங்கு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். இறை வணக்கத்தோடு தொடங்கிய பாராட்டு விழாவிற்கு மொழிபெயர்ப்பாளரும் முன்னாள் பிரதி அதிபருமான எஸ். புண்ணியமூர்த்தி பிரதம விருந்தினராகவும், . திருக்கோவில் மக்கள் வங்கி முகாமையாளரும், பிரதி முகாமையாளரும் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர். மற்றும் பாடசாலை PSI இணைப்பாளர், கல்வியியலாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஆகிய தரப்பினரின் பங்கேற்பு சிறப்பாக அமைந்திருந்தது. பாடசாலை அதிபர் சபாரெட்ணம் ஸ்ரீகாந்தன் அவர்களது வழிநடத்தலும் மிகுந்த கவனத்தை ஈர்த்திருந்தது.
 
இங்கு நிகழ்வது வருடாந்த பரிசளிப்பு விழாவா அல்லது முப்பெரும் கலை விழாவா என்று வியக்குமளவிற்கு மாணவரை ஆசிரியர்கள் சிறப்பாகப் பயிற்றுவித்திருந்தனர்.தரம் ஏழு வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவியின் பரதநாட்டியம் மண்டபத்தை மெய் மறக்கச் செய்யும் அளவிற்கு அரங்கத்தின் பார்வையை ஈர்த்திருந்தது. மாணவர்களை இந்த வெற்றிக்காகப் பயிற்றுவித்த ஆசிரியைக்கு மாணவர்கள் எதிர்பாராத மகிழ்ச்சியையும் ஆதரவையும் தெரிவித்து மாலைகளால் அலங்கரித்திருந்தனர். திருக்கோயில் கல்வி வலயத்தில் மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான ஒரு பாடசாலையாக வளர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்காக உழைத்த அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றார்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.