இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக நேபாளம் சென்ற இலங்கை STF அதிகாரிகள்!




பாதாள உலகக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இரு வீரர்கள் நேபாளம் சென்றுள்ளனர்.

இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளுக்கு உதவும் வகையில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து சந்தேகநபர்கள் நேபாள பொலிஸ் மற்றும் சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் நேற்று (14) நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.