
(செங்கலடி நிருபர் சுபஜன்)
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உறுகாமம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று–செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சி. சர்வானந்தனின் வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் நேற்று (18) இரவு11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பற்றியதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருந்த பொருட்கள் , கதவு ஜன்னல், கூரை என வீட்டில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளன.
இதே வேளை வீட்டின் வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தீப் பற்றியுள்றதுடன் சிறிய தேசம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரான
சி. சிவானந்தன் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிசார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தியதுடன்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.


.jpeg)

