மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்


மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட  டபிள்யூ.யு.டி கினிகே தனது கடமைகளை செவ்வாய்க்கிழமை (07) சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். 

மாவட்டத்தில் உதவி பொலிஸ் மா அதிபராக கடமையற்றிவந்த எம்.என்.எஸ்.நுவான்மெண்டிஸ் இடமாற்றம் பெற்று சென்றதையடுத்து இந்த வெற்றிடத்துக்கு புதிய உதவி பொலிஸ் மா அதிபராக டபிள்யூ.யு.டி கினிகே நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்றது. 

இதில் 15 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  உட்பட அதிகாரிகள் பங்குபற்றனர்.

இதன் போது அவருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு சர்வ மதங்களைச் சேர்ந்த குருமார்களின் ஆசீர்வாதத்துடன் அவர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.