வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை



வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகள் இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு வழங்கும் போர்வையில் பல நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது நிறுவனம் குறித்து நன்கு ஆராய்ந்து அதற்கு பின்னர் வாகனங்களை வாடகைக்கு எடுக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாகனங்களை வாடகைக்கு வழங்குவதாக கூறி விளம்பரப்படுத்தி இணையவழி ஊடாக பணத்தைப் பெற்றுக்கொண்டு வாடகை சேவையை வழங்காமல் மோசடி செய்தமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.