அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் ஒருவர், சிறைக்கூண்டிலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் செவ்வாய்க்கிழமை (07) பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருமே பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மாத்தளை சமகிபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அநுராதபுரம் பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் புதன்கிழமை (08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதால் இரவு நேரத்தில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபர் பொலிஸ் நிலைய சிறைக்கூண்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ. ஜயவீர ராஜபக்ஷ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்தன்று கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.