கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் காயம் !



அங்குரகொட வீதியில் பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தரிக்கோலால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 41 வயதுடைய இருவர் ஆவார்.

லொறி சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல்மாகாணத்தின் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒன்று அங்குரகொட வீதியில் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்று வீதியை வழிமறித்துள்ளது.

இதனால் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் லொறியின் சாரதி மற்றும் உதவியாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறின் போது லொறியின் சாரதியும் உதவியாளரும் பொலிஸ் கான்ஸ்டபிளை கத்தரிக்கோலால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்களான லொறியின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.