ஐஎம்எப் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக் கூடாது – கர்தினால் ரஞ்சித்


சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் வெளிநாடுகளின் நிபந்தனைகளுக்கு இலங்கை அடிபணியக் கூடாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு நிபந்தனைகளை அடிமையாகப் பின்பற்றுவது நாட்டின் சுயமரியாதைக்கும் சுதந்திரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

தெரண ஊடக வலையமைப்பின் 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வியாழக்கிழமை (09) கொழும்பு பேராயர் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு கிறிஸ்தவ ஆராதனையில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதை தெரிவித்தார்.

இவ்விழாவில் தெரண ஊடக வலையமைப்பின் நிறுவனர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, உபத் தலைவர் லக்சிறி விக்ரமகே, நிறைவேற்று பணிப்பாளர் மாதவ மடவல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.