மட்டக்களப்பில் வயலில் இறந்த நிலையில் யானை மீட்பு




மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட மதுரங்கேணி குளத்திற்கு அருகாமையில் உள்ள வயல் காணியில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த யானையின் உடல் கூற்று பரிசோதனைக்காக மிருக வைத்தியர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.

குறித்த யானையின் உடலை வனவிலங்கு அதிகாரிகள் குறித்த யானையை அகற்றாதமையினால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த யானையின் உடலை அகற்றினால் தான் இப்போகத்திற்தான விதைப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கலாம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.