
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
151 உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் திணைக்களங்கள் , அஞ்சல் அலுவலகங்கள் , உப அஞ்சல் அலுவலகங்களில் உலக அஞ்சல் தின நிகழ்வுகள் இடம்பெற்றது
151 வது உலக அஞ்சல் தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதான அஞ்சல் அலுவலகத்தில் உதவி அஞ்சல் அத்தியட்சகர் யு எல் எம் . பைசர் தலைமையிலும் , கிழக்குமாகாண பிராந்திய நிர்வாக காரியாலயம் மற்றும் மட்டக்களப்பு பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் காரியாலயத்திலும் நிகழ்வுகள் இடம்பெற்றன .
151வது அஞ்சல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆரம்ப நிகழ்வாக தேசிய மற்றும் அஞ்சல் கொடி ஏற்றப்பட்டு தேசிய மற்றும் அஞ்சல் கீதம் இசைக்கப்பட்டன .
இதே வேளை அஞ்சல் திணைக்கள அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வகையில் வலது கரத்தில் கருப்பு பட்டிய அணிந்து இன்றைய நிகழ்வினை சிறப்பித்தனர்
இதை தொடர்ந்து 151 வது அஞ்சல் தின நிகழ்வாக கேக் வெட்டி நிகழ்வு சிறப்பிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வுகளில் உதவி பிரதம தபால் அதிபர் எஸ் ஜி .தினேஷ் மற்றும் தபால் அதிபர்கள் ,மேற்பார்வை உத்தியோகத்தர்கள் , அனைத்து அஞ்சல் அலுவலக அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள் கலந்துகொண்டனர்.