பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஹெரோயினுடன் கைது




நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர் மனம்பிட்டிய பொலிஸாரால் புதன்கிழமை (15) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மனம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொலன்னறுவை மனம்பிட்டிய - மஹவெவ பிரதேசத்தில் வைத்து ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மனம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் ஆவார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 2900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மனம்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.