அக்கரைப்பற்று திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

(சித்தா)

கமு/திகோ/அக்கரைப்பற்று திருநாவுக்கரசு வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றைய தினம் (2025.10.09)  பாடசாலை மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம் பெற்றது. பாடசாலை அதிபர் திரு.பேரின்பராஜா திலகராஜ்  தலைமையில் இடம்பெற்ற  இந்த பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பிரதம அதிதியாக பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் ஓய்வு பெற்ற பிரதி அதிபரும் மொழிபெயர்ப்பாளருமான சாமித்தம்பி  புண்ணியமூர்த்தி  கலந்து கொண்டார். 

தேசிய மட்டம்  வலய மட்டம், கோட்ட மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்கள் பதக்கம், கேடயம், மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். குழு நடனத்தில் அகில  இலங்கை ரீதியில் தேசிய மட்ட வெற்றியைப்  பெற்றுக் கொண்ட மாணவர்கள் கௌரவம் பெற்றனர். மாணவர்கள் தொடர்ந்தும் அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கவேண்டுமென பிரதம அதிதி வேண்டுகோள் விடுத்தார். இறுதியாக ஒழுங்கமைப்புக் குழுவின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.