
2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் ஹோட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை (10) காலை அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இந்த வழக்குடன் தொடர்புடைய தேசபந்து தென்னக்கோன் மற்றும் ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றில் அஜராகியிருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு டிசம்பர் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மாத்தறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.