வீதியில் விழுந்து கிடந்த தோட்டாக்கள் !


காலி மஹமோதர வைத்தியசாலைக்கு அருகில் வெக்குனகொட வீதியில் விழுந்த கிடந்த 15 தோட்டாக்களை காலி பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை கைப்பற்றியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீதியில் தோட்டாக்கள் விழுந்து கிடப்பதாக காலி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தோட்டாக்களை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

ரி 56 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.