மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள்



மட்டக்களப்பு மாவட்டத்தில் கிழக்கு மாகாண மட்ட சிறார்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எஸ்.ஆர். ஹசந்தி தலைமையில் வெபர் மைதானத்தில் (09) இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜெ.எஸ்.அருள்ராஜ் கலந்து சிறப்பித்தார்.

கிழக்கு மாகாண ஆரம்ப பிரிவிற்கான பிரதிக் கல்வி பணிப்பாளர் கே.ஜெயவதன் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் எற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றது.

வலய மட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர்களுக்கான கிழக்கு மாகாண போட்டியில் 17 வலயத்தினைச் சேர்ந்த 1836 மாணவர்களும் 153 அணிகள் கலந்து கொண்டு தமது திறமையை வெளிக்காட்டவுள்ளனர்.

வேகமாய் தடைதாண்டி ஓடுதல், நின்று நீளம் பாய்தல், தட்டம் பாய்தல், முழங்கால் ஊன்றி பந்து எறிதல், தாம்பு தாண்டுதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

இதன் போது சிறார்களின் கண்கவர் நடனங்கள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள்

Posted by Battinews on Friday, October 10, 2025