மாகாணமட்ட சிறுவர் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற பட்டிப்பளை பாடசாலை மாணவர்களை பாராட்டி வரவேற்கும் நிகழ்வு இன்று(10.10.2025) வெள்ளிக்கிழமை பட்டிப்பளை பாடசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைச் சேர்ந்த தரம் 3 கலப்பு அணியில் முதலிடத்தினை பெற்ற மாணவர்கள் பேண்ட் வாத்தியம் முழங்க மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
வித்தியாலய அதிபர் த. தேவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலயக்கல்விப் பணிப்பாளர் சிவசங்கரி கங்கேஸ்வரன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் தே. உதயகரன், ஆரம்பப் பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் உமா விவேகானந்தன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன், பாடசாலையின் அதிபர்கள், பிரதேச சபை உறுப்பினர் கோ. சுரேந்திரன், கிராம அமைப்புக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த பாடசாலையில் முதன்முறையாக இப்பாடசாலை மாணவர்கள் சிறுவர் விளையாட்டு போட்டியில் முதலிடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.