
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு 1.3 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க ஐக்கிய இராச்சிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரித்தானியாவின் பதில் உயர்ஸ்தானிகர் (Acting British High Commissioner) தெரேசா ஓ’மஹோனி, பிரித்தானிய உதவி நடவடிக்கைகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதைப் பார்வையிட காம்பஹா மாவட்டத்திலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிகளை இன்று செவ்வாய்க்கிழமை (09) நேரில் சென்று பார்வையிட்டார்.
இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கான ஐக்கிய இராச்சியத்தின் ஆரம்ப நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு 1 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய இராச்சிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பதில் உயர்ஸ்தானிகர் தனது விஜயத்தின் போது, பிரித்தானியாவின் உதவிப் பொருட்கள் விநியோகத்திற்காகத் தயார்ப்படுத்தப்பட்ட செஞ்சிலுவைச் சங்கக் கிடங்கைப் பார்வையிட்டார்.
அத்துடன் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்களைச் சந்தித்ததுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நேரடியாகப் பேசினார்.












.jpeg)