மோட்டார் சைக்கிள் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது !



மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வெலிவேரிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 21 மற்றும் 25 வயதுடைய தொடுவாவ மற்றும் வெலிவேரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இரண்டு சந்தேக நபர்களும் சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டஇரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.