வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களினால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

(சித்தா)
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய 1978 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பில் கல்வி கற்ற மாணவர் ஒன்றியத்தினால் 2025.12.08 திங்கட்கிழமையன்று அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட குகநேசபுரம் கிராமத்திலுள்ள 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு சாரியும் வழங்கப்பட்டது. இவர்களுக்கான 75 சாரிகளையும் நண்பர் திரு. தியாகராஜா பாலேந்திரன் உபயமாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நண்பர்களான முத்துராஜா புவிராஜா, கந்தலிங்கம் சத்தியகீர்த்தி, செபநாயகம் ஜெகச்சந்திரா, கலாவல்லி சௌந்தரராஜா, சந்திரலேகா மூத்ததம்பி ஆகிய நண்பர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.