-502826_850x460.webp)
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 32 வெளிநாட்டு பறவைகளை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெஹிவளை - நெதிமால பகுதியை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சமையல் பணிகளில் ஈடுபட்டுவந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












