வாழைச்சேனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மீட்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலன்னறுவை - மட்டக்களப்பு வீதியில் 20 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள தொலைபேசி கம்பத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை (08) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்றும், அதற்குரிய 4 தோட்டாக்களும், பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்றுமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து துப்பாக்கிகளும் தோட்டாக்களும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் வாழைச்சேனை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


.jpg)










.jpeg)