ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் கையொப்ப வேட்டை இன்று ஆரம்பம் - ரஞ்சித் மத்தும பண்டார


கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பொதுமக்களிடமிருந்து கையொப்பங்களை திரட்டும் பணி இன்று சனிக்கிழமை (10) ஆரம்பிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

தரம் 6 ஆங்கில பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.