நவகமுவ பகுதியில் கடந்த முதலாம் திகதி ஒரு வீட்டிற்குள் மூவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானதில், ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பாக ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதற்கமைய, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பியகம பொலிஸ் - பேரகஸ்சந்தி பகுதியில் இந்தக் குற்றத்தைத் திட்டமிட்டு உதவிய சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொரளை பகுதியைச் சேர்ந்த 24இந்தக் குற்றம் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், ஹோமாகம பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.










.jpeg)


