மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மற்றும் தங்கச் சங்கிலிகள் பறிப்பில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் வரக்காபொல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
வரக்காபொல பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் போலி இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி ஓட்டிச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், திருடப்பட்ட மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.