சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான், இதற்கு முன்னர் களுவாஞ்சிக்குடி நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றிய காலப்பகுதியில், அந் நீதிமன்றத்தின் களஞ்சியசாலையிலிருந்த சான்றுப் பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
நீதிமன்ற களஞ்சியசாலையில் இருந்த பொருட்களை மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அங்கு கடமையாற்றிய பதில் பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளைத் தொடர்ந்து, நீதிச் சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமாரை கடந்த 2026.01.02 ஆம் திகதி முதல் பதவி நீக்கம் செய்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நீதவான், மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்துள்ளதுடன் களுவாஞ்சிக்குடி, சம்மாந்துறை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதவானாகக் கடமையாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)

.jpg)




.jpeg)
.jpg)


