புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டம் !


தரம் 6 இற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று (16) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டில் 6-ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து கல்வி அமைச்சுக்கு முன்னால் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்தில் மாணவர்களும் பங்கேற்றிருந்ததாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாட கற்றல் தொகுதியை தவிர, ஏனைய பாடங்கள் தொடர்பான கற்றல் தொகுதிகளை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.