தங்கம், இலத்திரனியல் உபகரணங்களுடன் ஒருவர் கைது !



இராணுவப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட தங்கப்பொருட்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து கடந்த 30ஆம் திகதி வந்த, வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரே விமான நிலையப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக தங்கம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கணினி உபகரணங்களை அவர் எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.