கொலையில் முடிந்த பணத் தகராறு - இளைஞன் கைது



தலங்கம - அருணோதய மாவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) காலை பதிவாகியுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைசெய்யப்பட்டவர் தலங்கம தெற்கு பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஆவார்.

இருவருக்கிடையிலான பணத் தகராறைத் தொடர்ந்து, கூரிய ஆயுதத்தால் தாக்கியமையால் முதியவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முதியவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பில் ராஜகிரியவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.