கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள் !


தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்துள்ள இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றமையை அவதானிக்க முடிந்துள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரத்தை வட பகுதி மீனவர்கள் இழந்துள்ள நிலையில், இந்திய மீனவர்கள் இந்த நடவடிக்கை மேலும் மோசமாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.