கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
திருகோணமலை பகுதியில் புத்த சிலையை பிரதிஸ்டை செய்த காரணத்துக்காக நான்கு பௌத்த தேரர்கள் 09 பேர் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.இது முற்றிலும் தவறானது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு பொங்கல் சாப்பிடச் செல்லும் போது பௌத்த தேரர்கள் சிறையில் சிறைசோறு உண்ணுகிறார்கள். பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உணவும் உண்ணவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் பௌத்தத்துக்கு விரோதமாகவே செயற்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்தர்களுக்கு ஏன் சுதந்திரமாக வாழ முடியாது.
தேசிய மக்கள் சக்தியின் பௌத்த எதிர்ப்பு கொள்கை அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும். ஆகவே பௌத்தத்தின் மீது கை வைப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.










.jpeg)


