பாலத்திலிருந்து பாய்ந்த கெப் வாகனம்!


மொனராகலை - பொத்துவில் பிரதான வீதியில், மொனராகலை நகருக்கு அருகில் கெப் ரக வாகனம் ஒன்று பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த விபத்தினால் குறித்த வாகனத்திற்கும், பாலத்திற்கும், அத்துடன் மொனராகலை நகருக்கு நீரை விநியோகிக்கும் பிரதான குழாய் கட்டமைப்புக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

விபத்துத் தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.