ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த யாராவது பாதாள செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக சாட்சிகள் இருக்குமானால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள். அதற்கு நாங்கள் பூரண ஆதரவு வழங்கத் தயாராக இருக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (20) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் கடந்த மாதம் நிலையியற் கட்டளை 27இன் 2கீழ் கேட்கப்பட்டிருந்த கேள்வி ஒன்றுக்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளிக்கையில், பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 2 பேர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். அதனால் அவர்களை அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
எமது கட்சி ஒருபோதும் பாதாள செயற்பாடுகளுக்கு உதவுவதும் இல்லை. அதனை மேம்படுத்துவதும் இல்லை. கொலை, கொள்ளை, மோசடி இவை எதனையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. அதனை நாங்கள் நிராகரிக்கிறோம். அதனால் எமது கட்சியைசேர்ந்த யாராவது இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அவர்களை அதில் இருந்து நீக்கிக்கொள்ளுமாறு தெரிவிக்குமாறு எனக்கு அறிக்கக்கூடாது.
பாதாள நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருப்பதாக இருந்தால், ஒரு நிமிடம் கூட கடத்தாமல் அவர்களை கைதுசெய்து சட்டத்துக்கு முன்நிறுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவி்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்டும் அந்த செயற்பாடுகளுக்கு நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.











.jpg)
