
மட்டக்களப்பு நகருக்கு அருகிலுள்ள திருப்பெருந்துறை பகுதியில் தினமும் காட்டு யானைகள் நுழைந்து வயல் நிலங்கள், தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், பொதுமக்களின் காணிகளுக்குள் நுழைந்து பொருள் சேதங்களையும் ஏற்படுத்துகின்றன.
விமானப்படை காணி வழியாகவே யானைகள் கிராமப்பகுதிக்குள் வருகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதைத் தடுக்கும் வகையில் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதே மக்களின் கவலை.
திருப்பெருந்துறை – மட்டக்களப்பு நகரை இணைக்கும் முக்கிய வீதியை தினமும் பலர் பயன்படுத்துகின்றனர். அதே வீதியை கடந்தே யானைகள் நகர்வது மக்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.
வீதி பயனர்களுக்கு எச்சரிக்கை:
• குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மிகுந்த கவனத்துடன் பயணிக்கவும்.
• தனியாக பயணிப்பதை தவிர்க்கவும்.
• யானைகள் காணப்பட்டால் வாகனத்தை நிறுத்தி தூரம் விட்டு பாதுகாப்பாக காத்திருக்கவும்.
• தேவையானால் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகள் அல்லது பொலிஸாருக்கு தகவல் வழங்கவும்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிலையான தீர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.












.jpeg)