
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று (18) திடீரென முடங்கியது.
டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை பார்வையிடுவதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் முறைப்பாடு அளித்துள்ளனர்.
குறிப்பாக வட்ஸ்அப் போன்ற தளங்களில் வீடியோ லிங்குகள் சரியாக தொழிற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
இருப்பினும் கூகுள் நிறுவனம் சேவைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.



.jpeg)







