நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இந்தியச் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் வீதியோரத்தில் நின்ற தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் குறித்த பேருந்துடன் மோதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்திருந்த தாய் உயிரிழந்தார்.
தனது இரு பிள்ளைகளையும் மேலதிக வகுப்புக்கு அனுப்பி வைப்பதற்காக வீதியோரத்தில் காத்திருந்த 40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.
அத்துடன், பேருந்தில் பயணித்த இந்தியப் பிரஜைகள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.












