மின்சார சபை தொழிற்சங்கங்களின் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் !


மின்சார சபை தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

எஞ்சிய இரண்டு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

முன்வைக்கப்பட்ட 64 கோரிக்கைகளில் பெரும்பாலானவை மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அதே சலுகைகள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் என்பதாகும்.

இதில் 59 கோரிக்கைகளுக்கு முதற்கட்டக் கலந்துரையாடலின் போதே பணிப்பாளர் சபை இணக்கம் தெரிவித்திருந்தது.

அதன் பின்னர் 5 கோரிக்கைகள் எஞ்சியிருந்ததுடன், அவை குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானமொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இறுதியாக எஞ்சியுள்ள இரண்டு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்