இந்த திட்டத்தில் இணையும் நபர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்ட பின்னர், அவர்களின் முகம் அல்லது குரல் பயன்படுத்தப்பட்ட வீடியோக்களை YouTube கண்டறிந்து அவர்கள் பரிசீலிக்க அனுமதிக்கும். அந்த வீடியோ YouTube தனியுரிமை விதிகளை மீறினால், அதை நீக்க கோர முடியும்.
AI தொழில்நுட்பம் வளர்ந்ததால் ஒருவரின் முகம் அல்லது குரலை போலியாக உருவாக்குவது மிகவும் எளிதாகி விட்டது என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி முதலில் 2024 டிசம்பரில் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் பிரபல YouTube உருவாக்குநர்களுக்கும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் சோதனை அடிப்படையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் பரிகாசம், சாடை அல்லது அரசியல் விமர்சனம் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை அடக்க இந்த கருவி பயன்படுத்தப்படாது என்றும் YouTube தெரிவித்துள்ளது.











.jpg)

