புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் கார் விபத்து!


தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொஹமட் பைசல் காரைச் செலுத்திச் சென்ற வேளையில், கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுட, விபத்து இடம்பெற்ற சமயம் காரில் மொஹமட் பைசல் மாத்திரம் இருந்துள்ளார்.

இந்த விபத்தினால் கார் மற்றும் மதில் ஆகியவற்றுக்குக் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.