
மட்/மமே/முதலைக்குடா மகா வித்தியாலயம் கணித ஒலிம்பியாட் போட்டியில் மாவட்ட மட்டத்தில் தெரிவான மாணவர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றி மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் வெற்றியீட்டிய நிலையில் மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவான மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மகா வித்தியாலய மாணவர்களான செல்வன் த.நதுஜன், செல்வன் கு.கபிஷானன், செல்வன் த.துர்ஷாந்த் ஆகியோர் இன்று (2026-03-04) புதன்கிழமை காலை ஒன்றுகூடலின் போது வித்தியாலய முதல்வர் திரு.அ.கிருபாகரன் அவர்களின் தலைமையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அதேவேளை இவர்களைப் பயிற்றுவித்த எமது வித்தியாலய ஆசிரியர்களான திருமதி சஜிக்கா மிதுஷன் மற்றும் திருமதி சுஜானா கவிப்பிரசாந்த் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் சுயமாக முன்வந்து இவர்களுக்குப் பயிற்சி வழங்கிய எமது வித்தியாலய முன்னாள் ஆசிரியர் திரு.சி.சிவநந்தன் அவர்களும் பாராட்டப்பட்டார்.












